இதய நோய்க்கு இனிய தீர்வு தரும் பிஸ்தா பருப்பு.!

Print lankayarl.com in மருத்துவம்


பிஸ்தா பருப்பில் வைட்டமின் ஏ மற்றும் இ போன்ற சத்துக்கள் உள்ளது, இது இரத்த நாளங்களை பாதுகாப்பதுடன் இதயநோய் அபாயத்தை குறைக்கும் சக்தியும் கொண்டது.

பிஸ்தா பருப்பில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளது இது இரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்திக்கு மிகவும் பங்களிப்புச் செய்கின்றது.

செல்களுக்கு ஆக்ஸிஜனை கொடுக்கிறது மேலும் வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரைப் பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊறவைத்து தினமும் மாலையில் ஆண், பெண் இருபாலரும் சாப்பிட்டால் நியாபகச் சக்தி அதிகரிக்கும்.

இதில் உள்ள வைட்டமின் ஈ, புறஊதாக் கதிர்களால் தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும், தோல் புற்றுநோய் வராமல் இருக்கவும் உதவுகிறது.

சியாசாந்தின், லூட்டின் ஆகிய இரு கரோட்டினாய்டுகள் பிஸ்தாவில் காணப்படுகின்றன.

இவை கண்ணின் விழித்திரையைப் பாதுகாத்து, தெளிவான பார்வையை தருகின்றன.

இதயநோய்கள் வராமல் தடுப்பதிலும், கண்புரை நோயில் இருந்து காப்பதிலும் முக்கியபங்கு வகிக்கின்றன.

பிஸ்தா சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கும் ஆரோக்கியம் தரும், எச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கும்.

மேலும் டைப் 2 நீரிழிவு நோயில் இருந்தும் பிஸ்தா காக்கிறது ஒரு கப் பிஸ்தா பருப்பில் 60 சதவீதம் மினரல், பாஸ்பரஸ் உள்ளது.