வாய்துர்நாற்றம் உடனடியாக குணமாக இந்த சாதாரண பொருட்கள் போதும்

Print lankayarl.com in மருத்துவம்

பழங்காலம் முதலே நம் உணவுகளில் சுவைக்காக சேர்க்கப்படும் பொருள்களில் முக்கியமானவை பூண்டு மற்றும் வெங்காயம். இந்த இரண்டு பொருட்களும் சுவையை மட்டும் அதிகரிப்பதில்லை, அதிகளவு ஆரோக்கியத்தையும் வழங்குகிறது. இவை எவ்வளவுதான் ஆரோக்கியமானதாக இருந்தாலும் இவற்றால் உங்கள் வாயில் துர்நாற்றம் ஏற்படும் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிட்டுவிட்டு மற்றவர்களுடன் பேசும்போது அது அவர்களுக்கு மட்டுமன்றி உங்களுக்கும் சங்கடத்தையும் ஏற்படுத்தும். இந்த சூழ்நிலையில் நீங்கள் சாப்பிடும் சில பொருட்கள் பூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் வாய் துர்நாற்றத்தை சரிசெய்யும். எந்தெந்த பொருட்கள் உங்கள் வாய்துர்நாற்றத்தை குணப்படுத்தும் என்பதை இங்கு பார்க்கலாம்.

பூண்டு மற்றும் வெங்காயம் ஏன் வாய்துர்நாற்றத்தை உண்டாக்குகிறது?

ஆய்வுகளின் படி பூண்டு மற்றும் வெங்காயத்தில் உள்ள சில வேதிப்பொருட்கள்தான் வாயில் துர்நாற்றத்தை உண்டாக்குகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இவற்றில் இல்ல அல்லிசின், மெதில் சல்பைட் மற்றும் சிஸ்டைன் சல்பாக்ஸைடு போன்ற வேதிப்பொருட்கள் ஆகும். மெதில் சல்பைட் பூண்டு மற்றும் வெங்காயத்தை வெட்டும்போது வெளியேறுகிறது. இவற்றை சாப்பிடும்போது இதில் உள்ள வேதிப்பொருட்கள் இரத்தத்தில் கலந்து மோசமான வாய்துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

பால்

ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி பாலானது பூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் வாய்துர்நாற்றத்தை சரிசெய்யும் என்று கூறுகிறார்கள். சாப்பிட்டு முடித்த பின் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை குடிப்பது உங்கள் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை உடனடியாக குறைக்கும். சாப்பிட்டு முடிப்பதற்கும், பால் குடிப்பதற்கும் இடையில் குறைந்தது 15 முதல் 20 நிமிடம் இடைவெளி இருக்க வேண்டியது அவசியம்.

ஆப்பிள்

பல் மருத்துவர்கள் பரிந்துரைப்பது என்னவெனில் ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும். ஏனெனில் ஆப்பிளில் உள்ள இயற்கை என்சைம்கள் பூண்டு மற்றும் வெங்காயத்தில் உள்ள சல்பரின் வீரியத்தை குறைக்கும். இதனால் உங்களுக்கு கிடைப்பது துர்நாற்றமில்லாத நறுமணமான வாசனையாகும். எனவே சாப்பிட்டு முடித்தபின் ஒரு ஆப்பிளோ அல்லது ஆப்பிள் ஜூஸோ குடிப்பதை வழக்கமாக கொள்ளுங்கள்.

நீர்

பூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் கெட்ட வாசனையை போக்க இதுதான் மிகவும் எளிமையான அதேசமயம் உபயோகமான வழி ஆகும். வெதுவெதுப்பான நீரை சாப்பிட்டப்பின் குடிப்பது உங்கள் வாயை புத்துணர்ச்சியாக வைத்திருப்பதுடன் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றவும் பயன்படுகிறது.

பார்ஸ்லே

பூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் வாய்துர்நாற்றத்தை சரிசெய்ய சிறந்த தீர்வு இந்த பார்ஸ்லேதான். இந்த பச்சை இலையை சாப்பிட்டவுடன் வாயில் போட்டு மெள்வது உங்கள் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை சரிசெய்வதுடன் வாயை சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

எலுமிச்சை நீர்

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் ஆன்டிபாக்டீரியால் பண்புகள் இதை ஒரு மிகசிறந்த இயற்கை நிவாரணியாக மாற்றியிருக்கிறது. இது பூண்டு மற்றும் வெங்காயத்தினால் ஏற்படும் வாய்துர்நாற்றத்தை விரட்டுகிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எலுமிச்சை சாறுடன் சூடான நீரை அதில் கலந்து 3 முதல் 4 முறை வாய் கொப்பளிக்கவும். இது உங்கள் வாய்துர்நாற்றத்தை விரட்டும்.

ஏலக்காய் மற்றும் சீரகம்

பச்சை ஏலக்காயுடன் சீரகத்தை கலந்து பயன்படுத்துவது உங்களை பூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் துர்நாற்றத்திலிருந்து பாதுகாக்கும். இந்த கலவையை வாயில் மெள்ளுவதுடன் ஒரு டம்ளர் சூடான நீர் குடிப்பது உங்களுக்கு சிறந்த தீர்வை வழங்கும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா உங்கள் வாயில் உள்ள pH அளவை சமநிலையில் வைத்திருப்பதுடன் பாக்டீரியாவால் ஏற்படும் துர்நாற்றத்தை குறைக்கவும் உதவுகிறது. பேக்கிங் சோடாவை உப்புடன் கலந்து அதனை சூடான நீரில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்றுமுறை வாய்கொப்பளிப்பது உங்கள் வாய்துர்நாற்றத்தை குறைப்பதுடன் உங்கள் வாயை கிருமிகளிடம் இருந்தும் பாதுகாக்கிறது.