மருத்துவ குணங்கள் நிறைந்த சீத்தாப்பழம்

Print lankayarl.com in மருத்துவம்

சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம், நீர்சத்து, மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து போன்றவை அடங்கியுள்ளன.

சீதாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.

* சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதயம் பலப்படும்.

* சீதாப்பழத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வர கொலஸ்ட்ரால் வராமல் பாதுகாக்கலாம்.

* சீதாப்பழத்துடன் ,வெள்ளைப்பூண்டு வைத்து மையாக அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் மறையும்.

*சீதாப்பழச்சாறு பருகி வர நரம்புகள் வலுப்படும்.

* சரும வறட்சி உள்ளவர்கள் சீதாப்பழச்சாறு குடித்து வர சரும வறட்சி நீங்கி இயல்பு நிலை பெறலாம்.

* அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்படுபவர்கள் சீதாப்பழம் உட்கொண்டு வர தசைகளை சீராக இயங்க வைக்க முடியும்.

* சீதாப்பழத்துடன் சிறிது இஞ்சிச்சாறு, கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், பித்தம் விலகும்.

* உஷ்ணத்தால் ஏற்படும் மாந்தம், குணப்படுத்தும் தன்மை இப் பழத்திற்கு
உண்டு.

* ஊளைச்சதை உள்ளவர்கள் தொடர்ந்து சீதாப்பழம் சாப்பிட்டு வர ஊளை சதை கணிசமாக குறையும்.

* சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள், பழச்சாறுடன் சிறிது எலுமிச்சம் பழம் சாறு கலந்து பருகினால் சிறுநீர் தாரளமாக பிரியும். நீர்க்கடுப்பும் நீங்கும்.

* தொடர் வாந்தி, குமட்டல் ஏற்பட்டால் ஒரு சீதாப்பழத்தை மென்று தின்றால் உடனே வாந்தி, குமட்டல் நிற்கும்.

* சீதா பழச்சாறு குடித்தால் உடலில் ஏற்படும் வெப்பம் தணிந்து உடல் குளிர்ச்சி பெறும். கோடை உபாதைகள் எட்டிப் பார்க்காது.

* சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.

* சீதாப்பழ விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன், பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர, முடி மிருதுவாகும்.

* சீத்தாப்பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.