தொப்பையை குறைக்க இலகுவான வழிமுறை

Print lankayarl.com in மருத்துவம்

தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள்.

உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது, உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும்.

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும்.

இது வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவுப் பொருள்.

எலுமிச்சையில் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளது இது பசியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும்.

மேலும் இவை உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்.

புதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது.

தொப்பையை குறைக்கும் ஜூஸ் செய்யும் முறை

வெள்ளரிக்காய் – 1

எலுமிச்சங்காய் – 1

எலுமிச்சை – 2

துருவிய இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன்

புதினா இலைகள் – ஒரு கைப்பிடி

தண்ணீர் – 2.5 லிட்டர்

வெள்ளரிக்காய், 1 எலுமிச்சங்காய் மற்றும் 2 எலுமிச்சையை வட்ட வட்டமாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்னர் மீதமுள்ள 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து அதில் புதினாவை நறுக்கி போட்டு, அதில் 1.5 லிட்டர் நீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.

அதில் இஞ்சி மற்றும் மீதமுள்ள தண்ணீரை ஊற்றி அத்துடன் வெள்ளரிக்காய், எலுமிச்சங்காய் மற்றும் எலுமிச்சையை போட்டு நன்கு கிளறி 24 மணிநேரம் ஊற வைத்து பின் குடிக்க வேண்டும்.

இப்படி 3 நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால் தொப்பை குறையும்.